வவுனியா- குறிசுட்டகுளத்தில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(15.8.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குளவிசுட்டான் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தில் தோட்ட வேலைக்கு சென்ற போதே குறித்த குடும்பஸ்தர் மீது யானை தாக்கியுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நபரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தவராவார்.

இது தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
