ஈரானுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த ட்ரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசோடு எந்தவிதப் பேச்சுவார்த்தையோ அல்லது உரையாடலோ நடைபெறவில்லை.

ஈரானியத் துறைமுகங்கள் 

எதிர்காலத்திலும் திட்டமிடப்படவில்லை அத்தோடு ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்கிறது.

ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுச் சீராக இயங்கி வருகிறது.

Advertisement

அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துக் கடலடி வெடிமருந்துகளும் அகற்றப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, அமெரிக்காவுடன் எந்தவிதப் பின்னணிப் பேச்சுவார்த்தையிலும் தங்கள் அமைப்பு ஈடுபடவில்லை என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையும் (IRGC) மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments