சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை! பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.

சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை! | Young Couple Chennai Woman Brutal Murder Cooked

சிவப்பு நிற சூட்கேஸ் – பெண்ணின்   உடல் பாகங்கள்

அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு வாலிபரும் அந்த சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்தது பதிவாகியிருந்தது.

அந்த ஜோடி சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வந்து ஆக்ராவுக்கு செல்லும் ரயில் ஏறி அந்த பெட்டியை வைத்துவிட்டு உடனே இறங்கிவிட்டனர்.

அதன்பின் கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயில் பயணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக அவர்களின் வீட்டை போலீசார் கண்டறிந்து சென்று பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது

யாழில் 400 இற்கும் மேற்பட்டோருக்கு கண்பிரச்சனை; மின்குமிழ் பற்ற வைத்தவருக்கு விளக்கமறியல்

. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தடங்களை மறைப்பதற்காக பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் போட்டு மைதா மாவு, காய்கறிளை சேர்த்து சமைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

எஞ்சிய உடல் பாகத்தைத்தான் அவர்கள் சூட்கேசில் வைத்து ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் தலை இதுவரை கிடைக்கவில்லை. போலீசாரின் விசாரனையில், கண்ணாடி அணிந்த அந்த பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த இளைஞரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.

வட மாகாணத்தில் கடும் வறட்சி ; தாகம் தீர்க்கும் கடற்படையினர்

அதோடு, கடந்த 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் ஹைதுல் நிஷா என்கிற பெண்ணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவருடன் சண்டை வந்ததால் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஷ்கர் இருவரும் சேர்ந்து ஹைதுல் நிஷாவை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த அளவுக்கு கொடூரமாக கண்டதுண்டமாக வெட்டி பிரியாணி சமைத்த இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

தற்போது அவர்கள் ஒடிசாவில் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில் இருவரையும் தேடி தனிப்படை போலீசார் ஒடிசா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments