கனடாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார்.

செக் குடியரசை சேர்ந்த 58 வயதான ஸ்லெப்சிக் என்பவரே இவ்வாறு நாடு கடத்தல் உத்தரவை பெற்றுள்ளார்.

கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், தனது சொந்த நாட்டுக்கு அடிக்கடி சென்று வந்தமையே அவர் இந்த உத்தரவை பெற காரணமாக அமைந்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

செக் குடியரசில் தனக்கு ஆபத்து உள்ளதாக புகலிடம் பெற்ற நிலையில், அந்த நாட்டு கடவுச்சீட்டில் நாட்டுக்கு சென்று வந்தமை கனடா எல்லை பாதுகாப்பு முகவர அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்மூலம் அவரின் சொந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையெனுவும், கனடாவில் வாழ வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அவரது நிரந்தர குடியுரிமை அந்தஸ்து மற்றும் பாதுகாப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட போதும், அதனை விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்லெப்சிக்கை நாடு கடத்தும் நடவடிக்கையில் குடிவரவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பின் மூலம் கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், இலங்கை உட்பட வெளிநாடுகளுக்கு சென்று வரும் தமிழர்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments