பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை தவறான முறையில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டள்ளார்.
அவ்வாறான புகைக்கடங்களை வைத்து முகநூல் குழுக்களையும் பக்கங்களையும் இயக்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் கைபேசி
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தடுப்பு காவல் பணியகத்தின் அதிகாரிகளால் அவர் இன்று பெலியத்த பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி சந்தேக நபரின் கைபேசி காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மேலும் இதுகுறித்து புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதகவும் தெரிவிக்கப்படுகிறது.
