வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்! கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடபெற்றுள்ளது.

இன்று காலை (28), சந்தேக நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்! | Wife Taken To Forest Area And Murdered Husband

 பொலிஸார்  சந்தேகம்

கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments