லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ் மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (28.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் 

ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரித்தானிய அரசு இந்த விகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

லண்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்...! நீதி கோரி திரண்ட தமிழர்கள் | Protest Outside Sl High Commission In London

இதன்போது சர்வதேச நாடுகளின் கவனம் தேவை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நிற்கின்றோம், உண்மை, நீதி மற்றும் மாண்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரங்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments