மாஞ்சோலை வைத்தியசாலையின் தவறால் பறிபோன இளைஞனின் உயிர்.. RIP
கடந்த (30) அன்று சிகிச்சைக்காகச் சென்ற புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 25 வயது விஸ்ணுகரன் என்ற இளைஞன் ஒருவர், முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் தவறான மருந்து வழங்கப்பட்டதால் உ**யி**ரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.
குறித்த இளைஞனுக்கு தவறான மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில், வீடு சென்று அந்த மாத்திரையை அருந்தியபோது திடீர் சுகயீனமுற்று தாயின் மடியில் உ**யி**ரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றையதினம் (01) விஸ்னுகரன் அவர்களில் இறுதிக்கிரிகைகள் புதுக்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் ஏராளமான உறவுகளின் கண்ணீருடன் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர் கதையாக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கலை தெரிவித்து நிற்கின்றோம்..
