மலச்சிக்கலே இந்த நோய்க்கான முதல் காரணம்

பொருமையாக தொடர்ந்து படியுங்கள்

நமது கல்லீரல் மற்றும் சிறுகுடலுக்கு பாலமாக செயல்படுவது தான் பித்தப்பை. இந்த பித்தப்பை தான் செரிமான அமைப்பின் மிக முக்கியமான பகுதியாகும். பித்தப்பை என்பது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தத்தை சேமிக்கும் ஒரு சிறிய சாக் (இது கல்லீரலின் கீழ் உள்ளது). இது பார்ப்பதற்கு ஒரு சிறிய பேரிக்காய் போன்று காணப்படும்.

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக……

8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு சிறு உறுப்பு.

நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.

நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.

பித்தப்பையின் நலன் எவ்வளவு அவசியம் என உங்களுக்கு தெரியுமா

பித்தப்பை இல்லாமல் மனிதர்கள் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.பித்தப்பையில் கற்கள் உண்டாகி பிரச்சனை வந்தால் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றிவிடுவார்கள்.
https://chat.whatsapp.com/FIPHs2vRRBL0IdLqn8Wt5F
பித்தப்பை பித்த நீரை சேமித்து வைக்கும் உடல் உறுப்பாகும்.
இது உடலில் கொழுப்பை அதிகம் அண்டாமல் பாதுகாக்கவும், கொழுப்பு நிறைந்த உணவை செரிமானம் செய்யவும் உதவுகிறது. மேலும், உணவு செரிக்கவும் பித்தப்பை உதவுகிறது.

பித்தப்பையில் உண்டாகும் மிகப்பெரிய பிரச்சனை பித்தப்பை கற்கள்.பித்த நீரில் உண்டாகும் தாக்கத்தால் (கொலஸ்ட்ரால், எலக்ட்ரோலைட்ஸ்) பித்தப்பையில் கற்கள் உண்டாகின்றன.

ஆண்களோடு ஒப்பிடுகையில் முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு பித்தப்பை பிரச்சனைகள் அதிகமாக உண்டாகிறது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.

கர்ப்பம், ஈஸ்ட்ரோஜன், உடல் பருமன், பரம்பரை கூறு, மரபணு என பலவன பெண்கள் மத்தியில் பித்தப்பை பிரச்சனைகள் அதிகரிக்க காரணிகளாக இருக்கின்றன.

பித்தப்பை கற்கள் உண்டாவதில் என்ன பிரச்சனை எனில், அது உண்டானதற்கான எந்த அறிகுறியும் பெரிதாக வெளிப்படுத்தாது.
மருத்துவ பரிசோதனை செய்து மட்டுமே கண்டறிய முடியும்.

எந்த காரணமும் இன்றி உங்களுக்கு அடிக்கடி அதிகமாக வயிறு வலிப்பது, இத்துடன் செரிமான கோளாறுகள் உண்டாகிறது எனில், உங்களுக்கு பித்தப்பை கற்கள் பிரச்சனை இருக்கிறது என்பதை கண்டறிந்துக் கொள்ள முடியும்.

எண்ணெய் உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டாம். மேலும், அன்றாட உணவில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வது இந்த பித்தப்பை கற்கள் பிரச்சனை உண்டாகாமல் தடுக்க உதவும்.

பித்தப்பை புற்றுநோய் என்பது மிகவும் அரிதானது தான். ஆனால், இது உண்டானால் மிகவும் அபாயமானது.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பித்தப்பையின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த பித்தப்பையின் ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே அமைகிறது. எனவே தவறான உணவுப் பழக்கத்தால் பித்தப்பையில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதைப் பற்றி கீழே காணலாம்.

பித்த நீர்க்கட்டி..

இந்த பித்தப்பையில் தவறான உணவுப் பழக்கத்தால் பித்தப்பையில் படிக கற்கள் உண்டாகின்றன. இந்த பித்தக்கற்கள் சில நேரங்களில் நமக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக, தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் முதுகுவலி, குமட்டல் அல்லது வீக்கம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த பித்தப்பை கற்களை சில நேரங்களில் மருந்துகளால் குணப்படுத்த முடியும். இல்லையென்றால் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.

பித்தப்பை அழற்சி..

கோலிசிஸ்டிடிஸ் என்பது பித்தப்பை அழற்சி எனப்படுகிறது. நம் பித்தப்பையில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல் காரணமாக ஏற்படுகிறது. இது பித்தப்பை நோய்த் தொற்று என்றும் அழைக்கப்படுகிறது. கோலிசிஸ்டிடிஸ் கடுமையான வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. நோய்த் தொற்று நீண்ட காலமாக நீடித்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.

பித்தப்பை புற்றுநோய்..

பித்தப்பை புற்றுநோயும் சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் பித்தப்பை கற்கள் போன்று இருந்தாலும், முதுகு மற்றும் அடி வயிற்றில் தாங்க முடியாத வலி உண்டாகும். அறிகுறிகள் தாமதமாக இருந்தால் பிறகு சிகிச்சை செய்வது கடினமாகி விடும்.

இந்த மாதிரியான உணவுகள் வேண்டாம்..

பேக்கிங் உணவுகள்..

நீங்கள் பித்தப்பை பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மஃபின்கள், குக்கீகள், கப் கேக்குகள் மற்றும் பிற வேக வைத்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

அதிகளவு டிரான்ஸ் கொழுப்புகள் பித்தப்பையில் கொழுப்பை சரியாக செயலாக்க இயலாமல் வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை பிரச்சினை இருப்பவர்கள் கொழுப்பு குறைந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது.

காபி..

பித்தப்பை சுருங்கிப் போவதற்கு காபி ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் காபியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்..

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை உண்ணும் போது அஜீரணம் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி அல்லது வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இனிப்புகள் வேண்டாம்..

அதிக சர்க்கரை இனிப்புகளை எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் படிந்துள்ள கொழுப்புகளை கடினமாக்குகிறது. இதனால் இதய நோய்கள், சிறுநீர்ப்பையில் கற்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. எனவே இனிப்பு மற்றும் சர்க்கரை பொருட்களை அதிகம் எடுப்பதை தவிருங்கள்.

பித்தப்பைகற்களை கவனிக்காமல் விட்டால்……

பித்தக்கற்களினால் வரும் வலியை நோயாளிகள் நன்கு அறிவர். ஒரு வருடத்தில் எத்தனை தடவை வந்தது என்பது முதல், எவ்வளவு நாள் இருந்தது என்பதை நினைவு கூறும் அளவிற்கு அந்த வலி இருக்கும். வலியானது 1-5 மணி நேரத்திற்கும், பொதுவாக 24 மணி நேரத்திற்குள் வலி குறைந்து விடும். அவ்வாறு குறையாவிட்டால் பித்தப்பை அழுகும் நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில நிமிடங்கள் முதல், நான்கு மணி நேரம் கூட நீடிக்கும்.

சிலருக்கு இதனால் கணைய அழற்சி ஏற்பட்டு சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கும்.

இதர அறிகுறிகள்

காய்ச்சல்,

விட்டுவிட்டு வலி,

அதிவேக இதயத் துடிப்பு

மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பது),

தோலில் அரிப்பு,

வயிற்றுப்போக்கு

வாந்தி,

தலைவலி

குமட்டல்,

குளிர் காய்ச்சல் அல்லது நடுக்கம்

குழப்பம்,

பசி இன்மை,

அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுதல் ,

வலது தோள்பட்டையில் வலி

பசிகாதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும்.

மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம்.

வலது நெஞ்சில் வலி ,

நேர் பின்னே முதுகில் வலி,

வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்.

வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி,

உடல் எடை குறைவு,

போன்ற பல பிரச்சினைகள் தோன்றும்.

தப்பிக்க…

பித்தப்பை கல் வராமல் தடுக்க முடியாது. ஆனால், வாய்ப்பைக் குறைக்க முடியும்.

உணவு…………

தினமும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். உணவைத் தவிர்ப்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

எடை குறைக்க அவசரம் வேண்டாம்

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும். மிக வேகமாக குறைக்க முயற்சிக்கும் போது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வாரத்துக்கு அரை முதல் ஒரு கிலோ வரை எடை குறைப்பதே ஆரோக்கியமானது.

பொதுவாக நம் தவறான வாழ்க்கை முறையினால்……

எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

மேலும், இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவு மண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள்.

குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.

அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில்…

அஜீரண கோளறு,

அல்சர்,

மஞ்சள் காமாலை நோய்

அசைவ உணவுகள் செரிமானம் ஆகாது.

போன்ற பல பிரச்சனைகள்
வியாதிகள் வரும்.

பித்தப்பைகல் நீங்க
வீட்டு வைத்தியம்…
500மி.லி. விளக்கெண்ணெயில் 200கிராம் பூண்டை பேஸ்ட் ஆக போட்டு அத்துடன் 30கிராம் இந்துப்பு,20கிராம் பெருங்காயம் பொடித்துப் போட்டு நன்கு கொதிக்க விடவும் அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிண்டிவரவும் ஒரு பக்குவத்தில் எண்ணெய் தனியாக பிரிந்து கீழ் உள்ள பேஸ்ட் மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிவைத்து நன்கு ஆறியதும் எண்ணையை மட்டும் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் மண்டியை தூர எறிந்து விடவும். மேற்கண்ட எண்ணையை தினமும் இரவு உணவுக்குப் பின் 2ஸ்பூன்
(தேக வலிவையறிந்து) சாப்பிட்டு வர காலையில் எந்த சிரமமும் இன்றி மலம்கழியும். இதை 2 மாதம் தொடர்ந்து அருந்தினால் பித்தப்பை கல் கரைந்து விடும்.

முருங்கைக்கீரையை அடிக்கடி உப்பின்றி சமைத்து சாப்பிட்டு வர கரையும்.

பூலாப்பூ எனும் சமூலத்துடன் ( பூலாப்பூவின் அனைத்து பாகங்களும்.) முருங்கைக்கீரை சம அளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு காலை வெறும் வயிற்றில் ஒரு மாதம் சாப்பிட்டு வர பெரிய கற்களும் கரைந்து விடும். மருந்து சாப்பிட்டு முடியும் வரை மது, மாமிசம் கூடாது. உப்பைத் தவிர்த்தால் கல் சீக்கிரம் கரையும்.

“யானை நெருஞ்சிமுள் ” இச்செடியின் இலையை கழுவி விட்டு குடிநீரீல் முக்கிஎடுத்தால் நீர் வழுவழுப்பாக மாறும் இந்நீரை தினமும் வெறும் வயிற்றில்பருகி வர ஒரே மாதத்தில் நாட்பட்ட கற்ககளும் வெளியேறும்.

தினமும் 300 Ml அளவு அருந்தினால் போதும். பக்க விளைவுகள் எதுவுமில்லை. இச்செடி வரண்ட பிரதேசங்களில் வளரும். மலை அடிவாரத்திலும் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும். இதன் காய் யானை தலை வடிவில் இருப்பதால் இப்பெயர் இச்செடிக்கு.

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.

இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும். அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

சிறுகீரை தீநீர் 48 நாள் காலையில் குடிக்கவும்.

வாழைத்தண்டு சாறுடன் கொள்ளு சேர்த்து குடிக்கவும்.

நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

ஆப்பிள், பேரிக்காய்,ஆரஞ்சு போன்ற உணவுகளில் தினமும் ஏதாவது ஒன்றை உண்பது இந்த நோய் வராமல் இருக்க வாய்ப்பு.

வெஜிடபிள் சலாட் ஆக முள்ளங்கி, பீட்ரூட் ஆகியன தினமும் இரண்டு மூன்று துண்டுகளை சாப்பிடுவதும் இந்த நோய் வராமல் இருக்க வாய்ப்பு .

வெந்ததை மட்டும் சாப்பிடாமல் தினமும் ஒரு கப் பழக்கலவை மற்றும் காய்கலவை சாப்பிட இந்த மாதிரி நோய்கள் அண்டாமல் இருக்க வாய்ப்பு.

வாரம் ஒரு முறை முள்ளங்கி சாறெடுத்து 25 மி.லி. குடித்து வர நோய் கடுமையிலிருந்து சற்றே தீர்வு கிடைக்கலாம்.

நெருஞ்சில் விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, பெருமல்லிகை, பாதிரி போன்ற மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.

வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.

வலி இல்லாத காலத்தில் நிலவேம்பு சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.

முழுமையான கொழுப்பு கொண்ட இறைச்சி, வெண்ணெய் மற்றும் பால் போன்ற பொருட்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தூண்டி, பித்தப்பை பாதிப்பை ஆரம்பித்து வைக்கும்.

கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணை நிறைந்த அல்லது வறுத்த உணவுகளை பித்தக்கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த உணவு பொருட்கள் பித்தப்பையை கடினமான வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. பின் ஒரு நாள் திடீரென்று, அந்த கற்கள் பித்தநீர்பைக்கு தடையை ஏற்படுத்தலாம்.
கனோலா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய்கள், உண்மையில் பித்தப்பைக் கற்களை தடுப்பதில் திறன் மிக்கவை. அதுமட்டுமின்றி, நட்ஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.

குளிர்ந்த நீரில் கிடைக்கும் மீன் வகைகளான டூனா, கானாங்கெளுத்தி மற்றும் சாலமன் வகைகளை சாப்பிடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா-3, பித்தப்பையின் செயல்பாட்டை அதிகரித்து, பித்தக்கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உயர் கிளைசீமிக் கார்போஹைட்ரேட் உணவு பொருட்களை தவிர்க்கவும். உருளைக்கிழங்கு, அரிசி, பாஸ்தா மற்றும் ரொட்டி உணவுகள், உடலினுள் சென்று நமது உடலால் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தாலும், அவை பித்தப்பை கற்களை உருவாக்கும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். இதனால் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் மூலமும் தெரிய வந்துள்ளது.

நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களான தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைத்து, இயற்கையாக பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். நினைவில் கொள்ள வேண்டியவை…

உடலில் பித்தக்கற்கள் இருந்து, அதனால் எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றால், அப்போது எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டாம். அந்த நேரம், உணவுகளில் கவனத்தை செலுத்தினாலே அவை கரைந்துவிடும்.

* அதிக பருமன் அல்லது மிக வேகமாக எடை குறைவது போன்றவை பித்தப்பைக் கற்களோடு தொடர்புடையவை. ஆகவே உடல் எடையை குறைக்கும் போது படிப்படியாக மெதுவாக குறைத்தால், இயற்கையாகவே பித்தப்பைக் கற்களை தடுக்கலாம்

*

🍃

Reflexology,Yoga & Naturopathy 

🍃

*

*

🌱

Alternative Therapist-Jai Satheesh 

🌱

*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156* 

Follow the 

🍃

வாழ்வை 

🌱

வாழ்வோம் 

🌿

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments