இந்த மொழி ஆயிரக் காணக்கான தமிழ் பெண்களின் மார்பகங்களிலும் அவர்களின பெண் உறுப்புக்களிலும் சிங்களக் காடையர்களால் எழுதப்பட்டது என்ற விடயம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்
மொழி, இனம் மற்றும் நிலம் சார்ந்த அடையாளங்களைப் பேணுவதும், தாயகத்தை அழைக்கும் பெயர்களை உணர்வுபூர்வமாகக் காண்பதும் மனித வரலாற்றில் உலகெங்கும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு இயல்பான நிகழ்வாகும்.
ஒரு நிலத்தின் பெயர் என்பது வெறும் புவியியல் அடையாளம் மட்டுமல்ல; அது அந்நிலத்தில் வாழும் மக்களின் பண்பாடு, வரலாறு மற்றும் இறையாண்மையின் குறியீடாகவும் திகழ்கிறது.
. “சிறிலங்கா” என்ற சொல் சிங்கள மொழியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பெயராக இருக்கும் சூழலில், தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களான “ஈழம்” மற்றும் “இலங்கை” என்ற பெயர்களைப் பயன்படுத்துவதே எமது அடையாளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.
![]()
தங்கள் தாய்மொழியையும், உண்மையான பூர்வீக அடையாளத்தையும் மீட்டெடுப்பதற்காகப் உலகளவில் பல தேசங்களும் மக்களும் தங்களைத் தியாகம் செய்து போராடியுள்ளனர்:
அயர்லாந்து (Éire): ஆங்கிலேய ஆதிக்கத்தால் தங்களின் ‘கீலிக்’ (Gaelic) மொழி மற்றும் ஊர்ப் பெயர்கள் மாற்றப்பட்டபோது, ஐரிஷ் மக்கள் தங்களின் பண்பாட்டு இறையாண்மையைக் காக்கத் தீவிரமாகப் போராடி, தங்களின் தாய் நிலத்திற்கு ‘ஏரே’ (Éire) என்ற தாய்மொழிப் பெயரை மீட்டெடுத்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளின் பெயர் மாற்றம்: காலனித்துவ ஆதிக்கத்தால் வைக்கப்பட்ட அந்நியப் பெயர்களைத் துறந்து, தங்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ‘ரோடீசியா’ என்பது யிம்பாப்வே என்றும், ‘தகோமி’ என்பது பெனின் என்றும் தாய்மொழி/பூர்வீகப் பின்னணியில் மாற்றம் பெற்றன.
இந்திய மாநிலங்கள் மற்றும் நகரங்கள்: காலனித்துவ ஆட்சியில் சிதைக்கப்பட்ட பெயர்களைத் துறந்து, தமிழ்நாட்டு மக்கள் போராடித் தங்களது மாநிலத்திற்குத் “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டிக்கொண்டதும், மதராசு ‘சென்னை’ என மாறியதும் தாய்மொழிப் பற்றின் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
![]()
![]()
எமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விடயங்கள்….
நான் அவதானித்தவரை சிலர் சாதாரணமாக கதைக்கின்றபோதே சிறிலங்கா என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் கவலையளிப்பதாகவும், எம்மவர்களின் பொதுஅறிவு மற்றும் இனம், மொழி மீதான பற்றைக் கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் அமைகின்றது.
நாங்கள் மட்டுமல்ல எங்கள் எதிர்கால சந்ததிகள் மத்தியிலும் இந்த உணர்வுகள் ஊட்டப்பெறல் வேண்டும்.
தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு முன்னாலும் சரி, அவர்களுடன் கதைக்கும் போதும் சரி இலங்கை என்று பயன்படுத்துங்கள்.
இன்று சிங்களப் பேரினவாத பூதம் தமிழர்களின் பெருமளவு உரிமைகளை விழுங்கிப் பெருத்துவிட்டது. எஞ்சியுள்ள சிலவற்றையும் நாமாகத் தொலைத்துவிடப் போகிறோமா?
எங்கள் மொழி மற்றும் இன உணர்வை காப்பற்றவும் வளர்த்துக் கொள்ளவும் எம்மால் இயன்ற அளவிற்கு செயலாற்ற வேண்டும்.
அன்றும் சரி, இன்றும் சரி தமிழகத் தமிழர்கள் எங்கள் தாயகத்தை இலங்கை அல்லது ஈழம் என்றே அழைக்கின்றனர். எம்மை (இலங்கைத் தமிழர்களை) அவர்கள் ஈழத்தமிழர்கள் என்றே உரிமையுடனும், உணர்வுடனும் அழைக்கின்றனர். உண்மையில் இவ்விடயத்தில் தமிழகத் தமிழர்களைப் பாராட்ட வேண்டும்.
ஆனால் புலம்பெயர் நாடுகளிலுள்ள எம்மவர்களில் சிலர் எங்கள் தாயகத்தைச் “சிறிலங்கா” என உணர்வின்றிச் சொல்லும்போது மிகுந்த வேதனையாக உள்ளது.
எடுத்துக்காட்டாக:
விடுமுறையில் சிறிலங்கா செல்கிறோம்.
சிறிலங்காவிலிருந்து வந்த மரக்கறி, மீன் வகைகள் இங்கே கிடைக்கும்.
சிறிலங்கா உருபாவின் பெறுமதி.
சிறிலங்கா உணவுகள்.
இவ்வாறாக எழுத்திலும் அன்றாட உரையாடல்களிலும் சாதாரணமாக காணமுடிகிறது.
#சிறிலங்காவிற்கு_செல்கிறோம் என்பதை #உரிமையுடனும், #உணர்வுடனும் ஊருக்கு செல்கிறோம் என கூறலாமல்லவா! அப்படி சொல்லிப்பாருங்கள் எங்களுக்குள் புத்துணர்வு பிறக்கும். மேனி புல்லரித்து போகும்.
தமிழர்களால் நடத்தப்பெறும் உணவகங்களில் ஏதற்காக “சிறிலங்கா” உணவுகள் என குறிப்பிட வேண்டும். அவை உண்மையில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளாகும். அவைகளை “#தமிழர்_உணவுகள்” என்று உரிமையுடனும் உணர்வுடனும் எழுதியும் சொல்லியும் கொள்ளலாமே!
இப்போது வெளிநாட்டவர்களே எமது உணவுகளை தமிழர் உணவு, தமிழர் சாப்பாடு (Tamil food, Tamilische Essen) என தங்களது சாப்பாட்டு விளம்பர அட்டையில் (Menu card) அவரவர் மொழிகளில் பயன்படுத்துகின்றமையைப் பார்க்கும்போது பெருமையாகவும் பெருமகிழ்ச்சியாகவும் உள்ளது.
எனவே எமது நாட்டைப்பற்றிய தரவுகளை நாங்கள் பின்பற்றும்போதே, அந்தப் புரிதலை மற்றவர்களுக்குள் புகுத்த முடியும். அதை விடுத்து நாங்களே தவறாக எழுதியும் தவறாக கதைத்தும் வருவது நாளடைவில் எங்கள் அடையாளத்தை நாங்களே அழிப்பதாக அமைந்துவிடும்.
எங்கள் அடையாளத்தை நாங்கள் தான் நிலைநிறுத்த வேண்டும்.
“சிறிலங்கா” என்பது ஒரு வரைபடத்தின் பெயராக இருக்கலாம்…
ஆனால் “இலங்கை” அல்லது “ஈழம்” என்பது எமது உணர்வு, எமது பண்பாடு, எமது வரலாறு, எமது இறையாண்மை.
இன்னும் சிறப்பாக அடையாளப்படுத்துவதாயின் த*மி*ழீ*ழ*ம் என்றே சொல்லிக் கொள்ளலாம்.
அதனால் சொல்லுங்கள் பெருமையுடன்…
அது சிறிலங்கா அல்ல, அது நம் இலங்கை/ ஈழம்,
நம் த*மி*ழீ*ழ*ம்.
உண்மையில் தமிழினத்தில் காணப்படும் இன்னொரு மிகப்பெரும் குறைபாடு, தங்கள் பிள்ளைகளுக்குப் பிறமொழிப் பெயர்களைச் சூட்டிப் பெரு மகிழ்வு கொள்வதாகும். இந்த அடிப்படையில் தான் தங்கள் தாய்நாட்டையும் பிறமொழிப் பெயரால் அழைப்பதிலுள்ள பாதிப்பை உணர்ந்து கொள்ள முடியாதுள்ளனரா என்கின்ற ஐயம் தோன்றுகிறது.
இப்பதிவையும் இனவாதம் என்று சொல்லிக்கொண்டு சிலர் வருவர்! வரட்டும்!!
அன்புடன் சூரி சின்னத்துரை
