நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (15) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 344,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments