இந்த மண்ணிலேயே பூர்வீகமாக வாழ்ந்ததாகக் கருதப்படும் இராவணன் மரபைச் சொல்பவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? ![]()
ஒரு நிமிடம்… கோபப்படாமல் முழுவதையும் படித்துவிட்டு troll செய்யுங்கள்! ![]()
மகாவம்ச மரபின்படி, விஜயனும் அவனுடன் வந்த 700 பேரும் இலங்கையை அடைந்ததாகக் கூறப்படுகிறது.
கதையின் ஆரம்பம் என்ன?
தந்தையால் நாடுகடத்தப்பட்ட விஜயன்…
கடல் பயணம்…
அலைகளோடு போராட்டம்…
இறுதியில் இந்தத் தீவு! ![]()
அதாவது, வருகையின் கதையே ஒரு நாடுகடத்தலிலிருந்து ஆரம்பிக்கிறது.
ஆனால் இன்று சிலர் அந்த வருகையை வைத்து,
“இந்த நாடு எங்களுடையது…
மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகள்…”
என்று வரலாற்றையே தங்களுக்கான exclusive property போல பேசுகிறார்கள். ![]()
![]()
சரி…
விஜயன் வருவதற்கு முன்னால் இந்தத் தீவில் யார் வாழ்ந்தார்கள்?
அந்தக் கேள்வியைக் கேட்டாலே ஏன் இவ்வளவு கோபம்? ![]()
இந்த மண்ணில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன.
அப்படியிருக்க…
ஒரு பிற்கால வரலாற்று மரபில் சொல்லப்படும் ஒரு வருகையை வைத்து, அதற்கு முன்பிருந்த எல்லா வரலாறுகளையும் அழித்துவிட முடியுமா?
முடியாது.
இராவணன் பற்றிய கதைகள் வரலாறு, இதிகாசம், மக்கள் மரபு என்று பல அடுக்குகளில் பேசப்படுகின்றன.
அதை ஒருவர் நம்பலாம்.
மற்றொருவர் மறுக்கலாம்.
ஆனால் ஒருவருடைய மரபை கேலி செய்துவிட்டு,
தன்னுடைய மரபை மட்டும் “100% வரலாறு” என்று அறிவிப்பது கொஞ்சம் வேடிக்கையாகத்தானே இருக்கிறது? ![]()
வரலாறு என்பது யாருடைய குடும்பச் சொத்தும் இல்லை.
இந்த மண்ணின் ஒவ்வொரு கல்லுக்கும்,
ஒவ்வொரு கல்வெட்டுக்கும்,
ஒவ்வொரு பழைய குடியிருப்புக்கும்,
ஒவ்வொரு தொல்லியல் தடத்திற்கும்
தனித்தனி கதை இருக்கிறது.
அதனால்…
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் வந்தேறிகளே! ![]()
நீங்கள் விஜயனைப் பற்றி பெருமைப்படுவதால் உங்களுக்கு உரிமை இருக்கிறது என்றால்,
தமிழர்கள் தங்கள் பூர்வீக மரபுகள், வரலாற்று நினைவுகள், வீரக்கதைகள் குறித்து பெருமைப்படுவதற்கும் அதே உரிமை இருக்கிறது.
உங்கள் வரலாற்றை நீங்கள் கொண்டாடுங்கள்.
எங்கள் வரலாற்றை நாங்கள் கொண்டாடுகிறோம்.
