அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலுக்கு இராணுவத் தீர்வு இல்லை என்றும், மேலும் பொருளாதாரத் தடைகள் விதிப்பதன் மூலம் போரைத் தீர்க்க முடியாது என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த போருக்கு இராணுவத் தீர்வும் இல்லை, மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் அடிப்படையிலான தீர்வும் இல்லை, என்பதை அமெரிக்கா விளங்கிக்கொள்ளவேண்டும் என அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

இராஜதந்திர அடிப்படை

அத்தோடு, பேச்சுவார்த்தைகள், நீதி மற்றும் இராஜதந்திர கண்ணியத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு தீர்வால் மட்டுமே இந்தச் சூழ்நிலையைச் சமாளித்து, இந்தப் போரையும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்பையும் முடிவுக்குக் கொண்டுவர ஒரு இறுதித் தீர்வை வழங்க முடியும் என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Iran continues to trade verbal barbs with Trump.

அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை நாடினால், இன்னும் அதிக பலத்துடன் எங்களைத் தற்காத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தெஹ்ரான் தயாராக உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments