அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இந்து ஆலயம் மீது நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இல்லினாய்ஸ் மாகாணத்தின் பாலாடைன் பகுதியைச் சேர்ந்த 19 வயதான அலெக்சாண்ட்ரோஸ் பாபொராக்கிஸ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை வெறிவெறுப்பு கருத்துக்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ள இவர், ஞாயிற்றுக்கிழமையன்று(18) இல்லினாய்ஸின் அரோரா பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றை இலக்கு வைத்து பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுகள் 

ஆயினும், துல்லியமான இலக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இவரது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் ஒரு துப்பாக்கி, பல நிரப்பப்பட்ட துப்பாக்கித் தூணிகள் (Magazines), நூற்றுக்கணக்கான வெடிமருந்துகள், உடல் கவச உடை (Body armor) மற்றும் வெள்ளை வெறிவெறுப்புடைய முத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

வெளிநாடொன்றில் இந்து ஆலயம் மீது நடத்த திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு முறியடிப்பு! | Planned Shooting At A Hindu Temple Us

சந்தேக நபர், தான் ஒரு வெள்ளை வெறிவெறுப்புவாதி என்றும், இந்தியர்களைக் கொல்லக் காத்திருப்பதாகவும் தன்னிடம் கூறியதாக அவருடன் பணியாற்றிய சக ஊழியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர்.

தற்போது, சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments