யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த காணிகளில் 11.23 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்கவினால், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இதற்கமைய, வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 1.29 ஏக்கர் காணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 5.06 ஏக்கர் காணிகளும்,

யாழில் மேலும் 11.23 ஏக்கர் காணியை விடுவித்த இராணுவம்! | Army Releases Another 11 23 Acres Land In Jaffna

வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 4.88 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments