யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலன் (Janany Kunaseelan) பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். அதுமட்டுமல்லாது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடன் லியோ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அண்மையில் நடிகை ஜனனி தொடர்பில் சமூகவலைத்தளங்களில் சர்ச்சை ஒன்று பரவி வருகின்றது. அதாவது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரான்ஸ் சென்றிருந்த நடிகை ஜனனியுடன் புகைப்படம் எடுப்பதற்காக 50 யூரோ வாங்குவதாக கூறப்படுகின்றது.

 சமூக வலைத்தளங்களில் விமர்சித்து பதிவுகள்

இது தொடர்பில் ஜனனியின் நடத்தையை விமர்சித்து தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டிருந்தன.

இன்னிலையில் ஒரு இந்திய நடிகரோ அல்லது நடிகையோ, பிரபலங்களையோ எமது நாட்டிற்கோ அல்லது புலம்பெயர் தமிழர்கள் நிகழ்ச்சிகளுக்காக அவர்களை அழைக்கும்போது பெருமளவில் பணத்தை வாரி இறைக்கின்றார்கள்.

ஆனால் அதனை யாரும் கண்டுகொள்வதில்லை. இவ்வாறான நிலையில் ஈழத்தமிழ் நடிகை ஜனனியுடன் புகைப்படம் எடுக்க பணம் அறவிடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்போர் ஏன் இந்திய பிரபலங்களுக்கு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பணத்தை வாரி இறைப்பது தொடர்பில் கேள்வி எழுப்பவில்லை என சமூக ஆர்வலர்கள் தமது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments