கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் நேற்று முன்தினம் (22) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உ**யி**ரிழந்துள்ளதுடன், 15ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியோரத்தில் இருந்த பாலத்தில் மோதி, வீதியை விட்டு விலகிச்சென்று அதி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்துள்ளநிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் உயிரிழந்துள்ளார்.
உ**யி**ரிழந்த பெண், அநுராதபுரம், ரம்பவேவைச் சேர்ந்த நிலுமி செனரத்னே (வயது-30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தின் மாணவி என தெரியவந்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த பேருந்தின் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் மாணவியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை அன்புடன் வளர்த்த தாய், தந்தையர், உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்கள் அனுபவிக்கும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..

இந்தத் துயரமான தருணத்தில், நிலுமி அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழகத் தோழர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
”பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்துக்கொள்ள முடியும்”
