மன்னார் மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தைத் திட்டமிட்டு முழுமையாகச் சிங்களமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கடற்றொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களைச் சிங்கள உத்தியோகத்தர்கள் மூலம் நிரப்பும் நடவடிக்கை தற்போதைய ஆட்சிக்காலத்தில் உச்சம்பெற்றுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அதிகாரிகளோ இது குறித்துக் குரல் எழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வடக்கு மாகாணத்திலேயே அதிகம் சிங்களமயமாக்கப்படும் முதலாவது அலுவலகமாக மன்னார் கடற்றொழில் அலுவலகம் திகழ்கின்றது.

கட்டாய இடமாற்றம்

அங்கு அனைத்துத் தரங்களிலுமாக 8 உத்தியோகத்தர்கள் மட்டுமே பணியில் இருந்த நிலையில், புதிதாக 10 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

மன்னார் கடற்றொழில் திணைக்களத்தை திட்டமிட்டுச் சிங்களமயமாக்க முயற்சி | Attempt Sinhalicize Mannar Fisheries

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஆவர். இதன் மூலம் அலுவலகத்தில் தமிழ் உத்தியோகத்தர்கள் 10 பேராகவும், சிங்கள உத்தியோகத்தர்கள் 8 பேராகவும் மாறியது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, பணியிலிருந்த 10 தமிழ் உத்தியோகத்தர்களில் 4 பேருக்கு நேற்று திடீரெனக் கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களிடையே அச்சம்

இதனால், மன்னார் கடற்றொழில் அலுவலகத்தில் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளதுடன், சிங்கள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக மன்னார் கடற்றொழில் திணைக்களம் விரைவில் முழுமையாகச் சிங்களமயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பிராந்திய மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களிலும் ஏற்கனவே இரு சிங்கள ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது தலா 4 புதிய சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments