கருணாவின் வழியில் கார்த்திக் மனோகரன்!

கார்த்திக் மனோகரன், அர்ச்சுனா இராமநாதன் போன்ற இனத்துரோகிகள் தேசியத் தலைவரையும், போராளிகளையும், அவர்களின் போராட்டத்தையும் தங்களின் கீழ்த்தரமான துரோகச் செயற்பாடுகளுக்குப் பகடைக்காயாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கார்த்திக் மனோகரன், இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பத் தொடர்ந்து இயங்கி வருகிறான். தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஒன்றை அவன் ஒருங்கிணைத்தபோது, ‘ரோ’ உளவு அமைப்புடன் இணைந்து செயல்படும் கும்பல்களே அவனைச் சூழ்ந்திருந்தன. இவர்களின் பின்னணியில் உள்ள இந்த உண்மைகளைத் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் அம்பலப்படுத்தியிருந்தனர். புலம்பெயர் தேசங்களிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி… தமிழீழத்திற்கான அரசியல் எழுச்சி மீண்டும் உருவாகிவிடக் கூடாது என்ற நோக்கத்துடனேயே கார்த்திக் மனோகரன் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறான்.

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சியைத் தடுக்கும் நோக்கில், சீமானுக்கு எதிரான தொடர் செயல்பாடுகளில் கார்த்திக் மனோகரனும், ‘ரோ’ அமைப்புடன் இணைந்து செயல்படும் சில புலம்பெயர் குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள் இந்திய, இலங்கை அரசுகளின் கூலிப்படையினரைப் போலச் செயல்படுகின்றனர். வெளிப்படையாகச் சொல்வதானால், கார்த்திக் மனோகரனும் அவரது குழுவினரும் ஒரு ஒட்டுக்குழுவைப் போலவே இயங்கி வருகின்றனர்.

இன்று, தேசியத் தலைவரின் முதுகில் குத்தும் ஈனத்தனமான பச்சைத் துரோகச் செயல்களில் மனோகரன் குடும்பம் ஈடுபட்டு வருகின்றது. விடுதலைப் போராட்டத்தையும், அந்த மக்களையும் அழித்தொழித்த அதிகார வர்க்கக் கும்பல்களுக்கு அடிபணிந்து இவர்கள் அப்பட்டமாகச் செயல்படுகின்றனர். கருணா எவ்விதம் சிங்களப் பேரினவாதத்திற்குத் துணைபோய் வரலாற்றுத் துரோகம் இழைத்தானோ, அதே பாணியில் கார்த்திக் மனோகரனும் தமிழினத்திற்கு எதிரான துரோகச் செயல்பாடுகளுக்குத் துணைபோகின்றான். மீண்டும் பு*கள் அமைப்பு துளிர்விட்டுவிடக் கூடாது என்பதே இவர்களது எஜமானர்களால் கார்த்திக் மனோகரனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள செயல்திட்டமாகும்.

இவனின் தந்தையான மனோகரன், தனது சொந்தப் பெற்றோரின் (தேசியத் தலைவரின் தாய், தந்தையர்) உயிர் பிரிந்த துயரமான வேளையில், அவர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்வதற்குக்கூட முன்வரவில்லை. ஒரு மகனாக அவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதையையும் ஈமக்கடமைகளையும் அவர் செய்யத் தவறிவிட்டார். தன்னை ஈன்றெடுத்த தாய், தந்தையருக்கே இத்தகைய மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்தவர் இந்த மனோகரன். அவர்களுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே இவர்கள் இதுநாள் வரை இருந்து வந்தனர். இன்று குடும்ப உறவை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்காகக் கூலிப்படை வேலை செய்யவே இவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள் எனக் கூறினால் அது மிகையாகாது.

எனவே, தமிழினத்தின் அரசியல் எழுச்சிக்கு எதிரான இந்தத் துரோகக் குடும்பத்தின் சதிச் செயல்களுக்குப் பின்னால் அணிவகுப்பதையோ, அவர்களுக்குத் துணைபோவதையோ நாம் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments