முல்லைத்தீவு – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நாள் நிகழ்வுகள் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.

அதற்கமைய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

மாவீரர்களுக்காக அஞ்சலி

இன்று தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர்கள் பொதுமக்கள் இணைந்து மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம் | Cleaning Work In Theravil Maaveerar Thuyilum Illam

வழமை போன்று இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம்பெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பணிக்குழு தங்களை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

எனவே தொடர்ச்சியாக இடம்பெறும் சிரமதானப், பணிகள் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments