அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் , அக்கரைப்பற்றில் இருந்து , யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர்  உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – அனுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் , பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கொழும்புக்கு சென்ற யாழ் பேருந்தும் அக்கரைபற்று பேருந்தும் கோர விபத்து;பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Medawachchiya Rambewa 5 Dead In Accident Update

பலர் ஆபத்தான நிலையில் 

குறித்த பேருந்துகள் விபத்துக்குள்ளான போது , அந்த பேருந்தின் பின்னால் , வந்த தனியார் பேருந்தும் இவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

கொழும்புக்கு சென்ற யாழ் பேருந்தும் அக்கரைபற்று பேருந்தும் கோர விபத்து;பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Medawachchiya Rambewa 5 Dead In Accident Update

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்துமே மோதி விபத்துக்குள்ளியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்புக்கு சென்ற யாழ் பேருந்தும் அக்கரைபற்று பேருந்தும் கோர விபத்து;பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Medawachchiya Rambewa 5 Dead In Accident Update

விபத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம், ரம்பேவ மற்றும் மதவாச்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments