உண்மையை அறியவும், நீதிக்காகக் குரல் கொடுக்கவும், மறக்கப்பட்டவர்களை நினைவுகூரவும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

தமிழர் ஏதிலிகள் கழகத்தின் (Tamil Refugee Council) ஏற்பாட்டில், எதிர்வரும் 2026 டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில், ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகர மண்டபத்தில் (Parramatta Town Hall) இரண்டு நாள் கண்காட்சியும் சமூக நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கான விளம்பரப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ள UNICEF இலச்சினை கொண்ட பாடசாலைப் பை, செம்மணிப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பாடசாலைப் பையை நினைவுபடுத்துகிறது. மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தைகளின் துயரத்தையும், இன்னும் விடை காணப்படாத உண்மைகளையும் நினைவூட்டும் ஒரு அடையாளமாக அது அமைந்துள்ளது.

சனிக்கிழமை, 5 டிசம்பர் 2026

காலை 11.00 மணி – இரவு 8.00 மணி
கண்காட்சி மற்றும் காட்சிப்படுத்தல்கள்

ஞாயிற்றுக்கிழமை, 6 டிசம்பர் 2026

காலை 11.00 மணி – பிற்பகல் 3.30 மணி
கண்காட்சி மற்றும் காட்சிப்படுத்தல்கள்

பிற்பகல் 3.30 மணி முதல்
உத்தியோகபூர்வ நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகள்.

பங்கேற்பாளர்களுக்குச் சிற்றுண்டியும் வழங்கப்படும்.

இந்தக் கண்காட்சியில் மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், அவர்களின் நினைவுகள், உண்மையைக் கண்டறிதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்கள் இடம்பெறவுள்ளன.

இந்த வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரவும், உண்மை மற்றும் நீதிக்கான குரலுடன் ஒன்றிணையவும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ள முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்:

விளம்பரப் பிரசுரத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தும் பதிவு செய்யலாம்.

உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினருடன் இந்த அழைப்பைப் பகிர்ந்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments