அமெரிக்காவுக்கான இலங்கையின் முதல் பெண் தூதுவராக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று(23.11.2026) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், வெளிநாடுகளில் உள்ள ஏனைய இலங்கைத் தூதரகங்களிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தகுதியும் அனுபவமும் கொண்டவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.

குறிப்பாக, சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கான வெற்றிடமும் விரைவில் நிரப்பப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
