வெல்லவாய (Wellawaya) – மொனராகலை பிரதான வீதியில் புத்தல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெல்வத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினர் விசராணை

விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் இருவர் மற்றும் துவிச்சக்கர வண்டியிலும் இருவர் பயணித்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து : ஒருவர் பலி...மூவர் படுகாயம் | Motorcycle And Cycle Accident Youth Died

இதேவேளை காயமடைந்தவர்கள் புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ள துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை புத்தல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments