சமீபத்தில் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணான சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (24-08-2024) இடம்பெற்றுள்ளது. 

மன்னாரில் அடுத்தடுத்து சோகம்... உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவன் எடுத்த விபரீத முடிவு! | Mannar Family Woman Sindhuja Died Husband Suicide

கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் மருத்துவ தவறின் காரணமாக உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதனையடுத்து, அவரது கணவர் நேற்று அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வவுனியா பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதுடைய எஸ்.சுதன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments