மீண்டும் ரணிலின் வருகையே சிறுபாண்மை முஸ்லிங்களை இந்த நாட்டில் இருந்து முற்றாகத்துடைப்பதற்கு இலகுவாகயிருக்கும்,தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்கு சர்வதேச வலை பின்னலை பின்னி ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்க (Ranil மீண்டும் அமெரிக்கா போன்ற மேற்குநாடுகளோடு சேர்ந்து முஸ்லிகளை முற்றாக அளிப்பபதற்கு இலகுவான வளியைக்கண்டுபிடிப்பார் அனுபவமும் அறிவும் உள்ள விக்கிர சிங்காவால் முடியாதது எதுவும் இல்லையெனபரப்புரை?

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இரண்டு தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு (Batticaloa) சிவானந்தா மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அக்கூட்டத்தில் பேசிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரமுகர் பூபாபலப்பிள்ளை பிரசாந்தன் (Bhubabalapillai Prasanthan) பச்சை இனவாதத்தை கக்கும் வகையில் பேசி இருந்தார்.

இது தொடர்பில் முகநூலில் பலர், இந்த மட்டக்களப்பு தமிழ் அரசியல்வாதிகள் இப்போதுதான் இனவாதம் பேசுவதை போன்று நீலி கண்ணீர் வடித்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் எப்போதும் இன ரீதியான பிரச்சாரங்களையும் முன்வைத்து பதவியை அடைய முயற்சிக்கின்ற ஒரு தேர்தல் களம் என்பது அரசியலில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம்.

தமிழர்கள் மிக மோசமாக முஸ்லிம்களுக்கு எதிராக பேசி தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஏனைய அரசியல் பதவிகளை பெற்றுக் கொள்ளுகின்ற ஒரு நிலைமை மட்டக்களப்பிலே காணப்படுகிறது.

இப்போது ஜனாதிபதி தேர்தலில் செயற்படுகின்ற அல்லது பிரச்சாரம் செய்கின்ற கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு மாத்திரம் அவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து வர இருக்கின்ற நாடாளுமன்றத்தில் தமது ஆசனங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் தங்கள் பிரச்சாரங்களை முடுக்கி உள்ளனர்.

அந்த வகையில் தான் பிரசாந்தனின் பேச்சை தாங்கள் பார்க்க வேண்டும்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments