தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) மகன் ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் புதல்வரான கலை அமுதன் எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுடன் (Sajith Premadasa) இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளியான புகைப்படங்கள்

சஜித் பிரேமதாசவை யாழ்ப்பாணத்தில் (Jaffna) வைத்து கலையமுதன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இம்முறை 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) களமிறங்கியுள்ளார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில் சஜித் பிரேதமாச வடமாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments