தமிழரசு கட்சியின் மத்திய குழு தீர்மானம் என்பது கூட்டு தீர்மானமே : ப.சத்தியலிங்கம்தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானமே என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கூட்டடத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.

அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்து அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சியின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு

அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள்.

மாவை சேனாதிராஜாவுக்கும் அறிவித்து அவரும் வருவதாக இருந்தார். உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.

மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது. மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாசவுக்கு அதரவு வழங்குவது என்பதனையே அறிவித்தோம்.

எதிர்வரும் 4 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது. அவருடன் ஏற்கனவே நான் கதைத்துள்ளேன்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments