சற்றுமுன் தமிழீழப்பகுதியில்பகுதியில் கோர விபத்து… ஒருவர் உயிரிழப்பு! மற்றொருவர் வைத்தியசாலையில்கிளிநொச்சியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து இன்றிரவு (04-09-2024) 8 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments