பிரித்தானியாவின் ஸ்டெயின்ஸில் மூன்று குழந்தைகளின் மரணம் தற்போது கொலை வழக்காக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேமர் (Bremer)வீதியில்அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஓகஸ்ட் 31ஆம் திகதி மூன்று சகோதரர்கள் மற்றும் அவர்களின் தந்தை 31 வயதான Piotr Swiderski ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

பொலிஸ் கண்காணிப்பு

இந்த நிலையில், தற்போது மூன்று பிள்ளைகளின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த வழக்கில் இன்னொருவர் தொடர்பிருப்பதாக தற்போதைய சூழலில் தாங்கள் கருதவில்லை என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மூன்று பிள்ளைகளை மொத்தமாக இழந்து தவிக்கும் அந்த தாயாருக்கு சிறப்பு அதிகாரிகள் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று குழந்தைகள் : விசாரணைகள் தீவிரம் | Bodies 3 Children Recover Uk Investigation

இதனையடுத்து பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டதும் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

Piotr Swiderski மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, வழக்கு செப்டம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக அண்டை வீட்டில் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவயிடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பகல் 12 மணியளவில் தாங்கள் உணவருந்தும் நிலையிலேயே அலறல் சத்தம் கேட்டதாக அவர் கூறியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments