இறந்த உயிரினத்தின் செல்கள் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து செயல்படும் வாழ்க்கை மற்றும் இறப்புக்கு அப்பாற்பட்ட மூன்றாவது நிலையை உருவாக்குவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சியாட்டிலில் (Seattle) உள்ள வாஷிங்டன் (Washington) பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் நோபல் (Peter Noble) மற்றும் கலிபோர்னியாவின் (California) சிட்டி ஆஃப் ஹோப் நேஷனல் மெடிக்கல் சென்டரின் அதிகாரி அலெக்ஸ் போஜிட்கோவ் (Alex Pozhitkov) ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

உடலியலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு, ஒரு அறிவியல் புனைகதை திரைப்படத்தின் கதைக்களத்தைப் போல எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் சுழற்சி

ஒரு உயிரினம் மரணித்த பின் அதன் செல்கள் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில் இல்லாத புதிய திறன்களைப் பெறுவதை அவர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இறந்த தவளைகளின் தோல் செல்கள் ஆய்வகத்தில் உள்ள பெட்ரி டிஷுக்கு எவ்வாறு மாற்றியமைக்க முடிந்தது என்பதை அறிந்த போது அவை “xenobots” எனப்படும் பலசெல்லுலர் உயிரினங்களாக தங்களை மறுசீரமைத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இறந்த பின் நிகழும் மர்மம் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல் | Life After Death Scientists Solved The Mystery

ஆராய்ச்சிக் குழு இது ஒரு புதிய செல் செயல்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளதுடன்  மூன்றாம் நிலை என்று அழைக்கப்படும் நிலையில் செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது ஒரு மர்மமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், செல்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் “மின்சுற்றுகள்” உயிர்ப்புடன் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments