இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு? | Sri Lanka Parliamentary Election On November 14Th

இதன்படி, எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றம் தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் இடம்பெறும்.

இதனையடுத்து நவம்பர் 14 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதுடன், நவம்பர் 21 இல் புதிய நாடாளுமன்றம் கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments