வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பயிலுநர் ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்! | Female Teacher Abused A School Student In Vavuniya

14 வயது மாணவனை குறித்த ஆசிரியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும், இது தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியாவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்! | Female Teacher Abused A School Student In Vavuniya

பொற்றோரின் முறைப்பாட்டின் படி,  குறித்த மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments