யாழ்.சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவர் கடந்த 15ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு குறித்த குடும்பஸ்தர் நாதஸ்வர கச்சேரிக்கு சென்றுள்ளார்.

பின்னர் 16ஆம் திகதி வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தவேளை சாவகச்சேரியில் உள்ள பாடசாலை ஒன்றின் மதல் மீது மோதி விபத்துக்குள்ளானார்.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! | Jaffna Chavakachcheri Accident Family Man Died

இதனையடுத்து, ஆம்புலன்ஸிற்கு அறிவித்தல் வழங்கிய நிலையில் ஒரு மணத்தியாலத்திற்கு பின்னரே ஆம்புலன்ஸ் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! | Jaffna Chavakachcheri Accident Family Man Died

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments