முல்லைத்தீவில் (Mullaitivu) ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது  (26) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் உருவ படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

தியாக தீபம் திலீபன்

வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் | Tribute To Tyaga Deepam Thilipan
  1. வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்
  2. சிறைகளிலும் மற்றும் முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
  3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
  4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
  5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Gallery

GalleryGallery

GalleryGallery

GalleryGallery

Gallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments