இலங்கையில் இன்றைதினம் (30-09-2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் படி, இந்த எரிபொருள் விலை திருத்தம் ஏற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 307 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாயாகும்.

இலங்கையில் எரிபொருள்களின் புதிய விலைகள் இதோ! | New Prices Of Fuel Effective From Midnight Today

352 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

202 ரூபாவாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments