தென்னிலங்கையில் இன்று (05.10.2024) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காலி, நெலுவ பகுதியில் பேருந்து ஒன்றில் தவறி விழுந்த இளைஞனெ இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற பேருந்தில் பயணித்த இளைஞன் பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த போது கீழே விழுந்துள்ளார்.

விபத்தில் பலி

இதன்போது பேருந்தில் சக்கரத்தில் சிக்கி குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வெளிநாடு செல்ல விசாவுடன் தயாராக இருந்த இளைஞன் பரிதாபமாக மரணம் | Travel To Abroad Sri Lankan Boy Death Today

சில நாட்களில் இஸ்ரேலுக்கு பணிக்காக செல்ல காத்திருந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல விமான டிக்கெட் பெற்றிருந்த நிலையில் இளைஞனின் பரிதாப மரணம் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments