யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தோப்பு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மூதாட்டி உறவினர்கள் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று (09-10-2024) தனது வீட்டுக்கு சென்ற நிலையில் இன்று (10-10-2024) முற்பகல் அவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! | Woman Was Found Dead In A House In Jaffna

சம்பவ இடத்துக்கு சென்ற கரவெட்டி திடீர்மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.

மேலும், தடயவியல் பொலிஸாரும் தடயங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, மூதாட்டியின் சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடிப் பொலஸாருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments