மூன்று பிள்ளைகளின் தந்தை தாக்குதலில் பலிமாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பலாங்கொடை – தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பலாங்கொட, தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தை தாக்குதலில் பலி | Father Of Three Children Was Killed In The Attack

பலாங்கொடை பொலிஸார் விசாரணை

சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கச் செல்லும்போது மனைவியின் தந்தை தடுக்க முயன்றபோது மேற்படி நபரைத் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருமகனின் தலையில் அடிபட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் பலாங்கொடை பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 65 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments