37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் மாபெரும் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்(dr.s.jaishakar) தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட தி இந்தியா வே(The India way ) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாத்ஃபைண்டர் அறக்கட்டளையால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘இந்திய மாவத்தை’ (‘Indian Mawatha’)என்ற புத்தகம் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சில சிறப்புக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது.

இது சாதாரணமான நடவடிக்கையல்ல

ஆரம்பம் முதலே  இலங்கை(sri lanka) இந்தியாவுக்கு(india) சவாலாக இருந்தது. நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அக்கறை கொண்டு, இந்தியாவினால் உத்தரவாதமான தீர்வைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சி ஆரம்பத்திலேயே தவறாகிவிட்டது. ஆனால் இது சாதாரணமான நடவடிக்கையல்ல என இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் இந்தியா விட்ட மாபெரும் தவறு : ஒத்துக்கொள்ளும் கலாநிதி ஜெய்சங்கர் | Sri Lanka India Was Wrong

இலங்கையில் அமைதி காக்கும் நடவடிக்கை

அத்துடன், இலங்கையில் அமைதி காக்கும் நடவடிக்கைக்காக இந்தியா கடுமையாக உழைத்த போதிலும், அது குறைவான கவனத்தையே பெற்றது என வெளிவிவகார அமைச்சர் தனது நூலில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தொடர்பில் இந்தியா விட்ட மாபெரும் தவறு : ஒத்துக்கொள்ளும் கலாநிதி ஜெய்சங்கர் | Sri Lanka India Was Wrong

37 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா தலையிட்டமை குறித்து வெளிவிவகாரத்துறையில் உலகப்புகழ்பெற்ற அறிஞரான இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments