சூடானின் (Sudan) வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய (Russia) சரக்கு விமானத்தை அதிவிரைவு ஆதரவு படையினர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று (21) நடத்தப்பட்டுள்ளது.

சூடான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் (Abdel Fattah al-Burhan) செயல்பட்டு வருகின்றார்.

இராணுவப்படையின் தளபதி

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகின்றார்.

இந்தநிலையில், துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார்.

இதற்கு துணை இராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இராணுவத்திற்கும் மற்றும் துணை இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்படது.

துணை இராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

கனடாவிலுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

ஆதரவு படையினர்

இந்தநிலையில், சூடானின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்ய சரக்கு விமானத்தை அதிவிரைவு ஆதரவு படையினர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இதனடிப்படையில், ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் சூடானின் டார்புர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய சரக்கு விமானம் | Russian Cargo Plane Shot Down In Sudan

அத்தோடு, ரஷ்ய விமானம் ஆயுதங்களை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், இந்த சம்பவம் குறித்து ரஷ்யா விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *