ஏறாவூர் குடியிருப்புப் பகுதியில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்றிரவு (24) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் ஏறாவூர் குடியிருப்புப் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியைச் சேர்ந்த முஜாகித் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் இரவு பயங்கர சம்பவம்... ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Youth Died After Being Hit By Train In Batticaloa

மரணமடைந்த இளைஞனின் உடல் தற்போது ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்து.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments