தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் (V. Manivannan) குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த சம்பவமானது, இன்றையதினம் (26) நீர்வேலி (Neervely) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

இதன் போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்: மணிவண்ணன் கண்டனம்! | Attack On Tpc Supporters In Neerveli 2 Injured

இந்நிலையில் திரும்பிச் சென்ற குழுவினர் சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *