அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியை சோ்ந்த டொனால்ட் டிரம்ப்(donald trump) அந்நாட்டின் 47-ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்ப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பாக பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா(baba vanga) கணித்துள்ளமை நிஜமாகியுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடன், கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் வென்று, ஜனாதிபதியாக பதவியேற்றபோது அவருக்கு வயது 77. ஆனால் தற்போது, அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டிரம்ப்புக்கு வயது 78. இதன்மூலம், அதிக வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானவா் என்ற பைடனின் சாதனையை டிரம்ப் முறியடித்துள்ளாா்.

இந்த நிலையில், புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் பற்றி, உலகின் பல நிகழ்வுகளை முன் கணித்துச் சொல்லும் திறன் பெற்றதாகக் கூறப்படும் பாபா வங்கா, டிரம்ப் தொடர்பாக கணித்துச் சொன்னது நடந்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பல நிகழ்வுகளை கணித்த பாபா வங்கா

பல்கேரியாவைச் சேர்ந்த ஆன்மிகவாதியாக அறியப்படும் பாபா வங்கா, இரண்டாம் உலகப் போர், செர்னோபில் பேரழிவு, சோவியத் யூனியனின் வீழ்ச்சி என பல விஷயங்களை முன்கணித்துள்ளார். அதுபோலவே, உலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு மிக முக்கிய தலைவர்களின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியிருந்தார். ஒன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(viadimir putin), மற்றொருவர் டொனால்ட் டிரம்ப்.

அதாவது, டொனால்ட் டிரம்ப் பற்றி பாபா வங்கி கணித்திருந்தது என்னவென்றால், டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து உள்ளது. மர்ம நோயால் அவருக்கு காதுகள் பாதிக்கும். மூளையில் கட்டி ஏற்படலாம் என்று கூறியிருந்தார்.

டிரம்ப் உயிருக்கு ஆபத்து

ஆனால், அவர் சொன்னது போல, டிரம்ப் உயிருக்கு ஆபத்து நேரிட்டது. 2024ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி டிரம்ப் பிரசாரத்தில் இருந்தபோது, 20 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கித் தோட்டாக்கள் டிரம்பின் காதுகளை உரசிச் சென்றது. நல்வாய்ப்பாக டிரம்ப் உயிர் தப்பினார்.

டொனால்ட் டரம்ப் தொடர்பில் பாபா வங்காவின் தீர்க்க தரிசனம் : பலரும் வியப்பு | Baba Vanga Predicted About Donald Trump

டொனால்ட் டிரம்ப் பற்றி கிட்டத்தட்ட பாபா வங்காவின் கணிப்பு, துல்லியமாக இருந்ததாகவே கூறப்படுகிறது.ஜனாதிபதி தோ்தல் பரப்புரையின்போது டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா், அந்த சம்பவத்தை குறிப்பிட்டு டிரம்ப் கூறியதாவது: ஏதோ ஒரு காரணத்துக்காக எனது உயிரை கடவுள் காப்பாற்றியதாக பலா் என்னிடம் கூறினா். அமெரிக்காவை காக்க வேண்டும், அமெரிக்காவின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பதே அந்த காரணமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *