மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை

இந்தநிலையில், இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்களுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் | 500 Military Personnel Isolated In Mannar

இதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில் ,அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments