அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கட் அணி, போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தின் முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, நேற்று பேர்த்தில் ஆரம்பமானது. இதில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களுக்கு தமது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

நிதிஸ் குமார் ரெட்டி மாத்திரம் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்திய பந்துவீச்சாளர்களிகளின் ஆதிக்கத்தால் தடுமாற்றத்தில் அவுஸ்திரேலியா

பும்ராவின் பந்துவீச்சு

இந்தநிலையில், நம்பிக்கையுடன் துடுப்பாடிய களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, இந்திய அணியின் முக்கியதாக பும்ராவின் பந்துவீச்சினால் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை இழந்தது.

அவுஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு சவால் விடும் இந்திய அணி | Ind Vs Aus Test Series

இதன்படி, இன்று முற்பகல் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பித்து பகல் போசன இடைவேளையின்போது, அந்த அணி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம்

இதனையடுத்து அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சில் சவாலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள், தமது இரண்டாம் இன்னிங்ஸில், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவுஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு சவால் விடும் இந்திய அணி | Ind Vs Aus Test Series

இதன்படி, இன்று இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும் வரை, விக்கெட் இழப்பின்றி யஸாஸ்வி ஜெய்ஸ்வால் 90 ஓட்டங்களையும் கே.எல் ராகும் 62 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.

இந்தநிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments