சிங்கள ஊடகங்கள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவை பயன்படுத்தி மக்களின் தமிழ் தேசிய வாதத்தை தூண்டி இனவாதத்தை கட்டியெழுப்ப முயற்சிப்பதாக நோர்வேயின் அரசியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் என்.சரவணபவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றையதினம் (26) ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவி பறிபோனால் அந்த இடத்திற்கு அவரது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யா வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்த ஒரு வாரத்தில் சிங்கள ஊடகங்கள் தற்போது அர்ச்சுனா தொடர்பில் தகவல் திரட்டுவதில் அதிக கவனத்தில் உள்ளன.

சிங்கள ஊடகங்கள் அவரை வைத்து தகவல் எடுத்து தங்களை பிரபல்யபடுத்துவதற்கு முனைகின்ற நிலையில், அவரும் அதற்கு ஏற்றது போல நடந்து கொள்கின்றார்.

அர்ச்சுனாவை வைத்து திட்டமிட்டு தூண்டப்படும் இனவாதம் : கௌசல்யாவிற்கு திரும்பும் வாய்ப்பு | Mp Archuna Post Chance To Be Seen By Kowshalya

இந்த நிலையில், ஊடங்களின் இந்த வலையில் அவர் மாட்டிக்கொண்டு அது அவருக்கு எதிராக திரும்பி அவரது பதவி பறிபோக அதிகம் வாய்ப்புள்ளது.0

இன்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையும் தமிழ் ஊடகங்களை தாண்டி சிங்கள ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அநுர ஆட்சியில் இனவாதத்திற்கு வாய்ப்பில்லாத பட்சத்தினால் தற்போது சிங்கள ஊடகங்கள் எல்லாம் தமிழ் மக்களை எவ்வாறு தூண்டிவிடலாம் என காத்துத்துக்கொண்டிருக்கின்றன.

மேற்கொண்டுள்ள நடவடிக்கை

இவ்வாறான சூழ்நிலையில் இவர் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றார், இது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் வினையாக அமையும்.

நாடாளுமன்றத்தில் எடுத்த சத்தியப்பிரமணத்திற்கு எதிராக அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் அவருக்கு எதிராக திரும்பி அவர் கைதாக அதிகம் வாய்ப்புள்ளது.

அர்ச்சுனாவை வைத்து திட்டமிட்டு தூண்டப்படும் இனவாதம் : கௌசல்யாவிற்கு திரும்பும் வாய்ப்பு | Mp Archuna Post Chance To Be Seen By Kowshalya

இதனால் வாக்களித்த மக்கள், தாங்கள் ஏன் வாக்களித்தோம் என நினைத்து வருந்துவதற்கான சூழல் அதிகம் உள்ளது, அதனை அவரே உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்.

சிங்கள ஊடகங்களும் அர்ச்சுனாவை பயன்படுத்தி தமிழ் தேசிய வாதத்தை தூண்டி இனவாதத்தை கட்டியெழுப்ப முனைகின்றன.

இதனால் அவர் மிக கவனமாக செயற்படுவதுடன் பதவி பறிபோனால் அடுத்த வாய்ப்பு கெளசல்யாவிற்கு வழங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments