16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டை தடைசெய்யும் சட்டத்தை அவுஸ்திரேலியா நேற்று (28) நிறைவேற்றியுள்ளது. 

பல நாட்கள் இடம்பெற்ற வாத விவாதங்களுக்கு பின்னர், இந்த சட்டத்தை அந்த நாட்டின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டு நவம்பரில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்தச் சட்டம், உலகின் கடினமான சமூக ஊடகக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை நடைமுறை செய்யவுள்ளது.

சமூக ஊடகங்கள்

அத்துடன், நியாயமான பதிவுகளுக்கான நடவடிக்கைகளை எடுக்க சமூகத்தளங்களை கட்டாயப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடை | Social Media Ban Under 16 In Australian Parliament

அவுஸ்திரேலிய பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸின் மத்திய – இடது தொழிற்கட்சி அரசாங்கம், பழமைவாத எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற்ற பின்னர் இந்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள், சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இந்த சட்டம் தொடர்பில் பிரதமர் தமது வாதத்தை முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு 49.5 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments