கனடாவில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளமையே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற புலம்பெயர்தல் குழு முன் விளக்கமளித்த மார்க் மில்லர்,

கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான அதிர்ச்சிகரமான தகவல்! | Immigrants In Canada Are Forced To Leave

தற்காலிக அனுமதிகள் காலாவதியாகும் பெரும்பாலானோர் கனடாவில் இருந்து தாமாகவே வெளியேறக்கூடும் என கூறிய நிலையில், கொன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரொம், சுமார் 4.9 மில்லியன் பேரின் தற்காலிக அனுமதிகள் காலாவதி ஆகும் நிலையில், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை கனடா அரசு எப்படி உறுதி செய்ய உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மில்லர்,

கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான அதிர்ச்சிகரமான தகவல்! | Immigrants In Canada Are Forced To Leave

நமது நாட்டுக்குள் வருவோரில் பெரும்பாலானோர் தற்காலிகமாக வந்துள்ளதால், அவர்களுடைய அனுமதிகள் காலாவதியானபின் இங்கு தங்க அவர்களுக்கு உரிமை இல்லை, ஆகவே அவர்கள் தாமாகவே வெளியேறிவிடுவார்கள் என்றார்.

அப்படி தாமாக வெளியேறாதவர்களை புலம்பெயர்தல் அமைச்சகம் எப்படி கையாளப்போகிறது என ரொம் விடாமல் கேட்க, அவர்களை வெளியேற்ற கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜன்சிக்கு உரிமை உள்ளது என்றார் மில்லர்.

இந்த நிலையில் தற்காலிக அனுமதி பெற்று கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments