மாவீரர் தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக அநுர அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வற்கு எந்த ஒரு தடையும் இல்லை, அது மக்களுடைய உரிமை என்ற அடிப்படையில் அரசாங்கம் தெரிவித்தது.

எனினும், தற்போது மாவீரர் தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வது, அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு முரண்பாடானதாக காணப்படுகின்றது என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த ஆட்சி மாற்றம் என்பது நினைவேந்தல் விடயத்தில் பெரிய ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எமது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுகின்ற விடயத்தில் சுதந்திரமாக எந்த ஒரு இடையூறும் இன்றி நினைவேந்த அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments